தீபாவளிக்கு ஏற்ற 5 சுவையான பிரியாணி – நீங்க எதை ட்ரை பண்ண போறீங்க?…

இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் செய்ய விரும்பும் 5 வகை சுவையான பிரியாணியை பற்றி காணலாம்…  உலகில் அதிக ரசிகர்களை கொண்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த…

இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் செய்ய விரும்பும் 5 வகை சுவையான பிரியாணியை பற்றி காணலாம்… 

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த அளவுக்கு தேசம் கடந்து பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாக பிரியாணி திகழ்கிறது. அதிலும் பிரியாணி குறித்த பேச்சு எழுந்த உடனே, அதை உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை தோன்ற வைக்கும் உணவாக, பிரியாணி திகழ்கிறது.

ஒவ்வொரு மண் சார்ந்தும் ஊருக்கு ஊர் தனித்துவமான ருசியுடன் பிரியாணி தயார் செய்யப்படுகிறது. அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப சில மூலப்பொருள்களை சேர்ப்பதன் மூலம் சுவையிலும் மனத்திலும் வித்தியாசத்தை காண்பிக்கின்றனர். திருமணமோ, பிறந்தநாளோ அல்லது வேறு ஏதேனும் கொண்டாட்டமோ எதுவாக இருந்தாலும் அசைவம் விரும்புவோரின் உடனடி தேர்வும், முதன்மையான தேர்வும் பிரியாணி தான்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பிரியாணி செய்து அசத்தலாம் என்ற யோசனை பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால் என்ன வகை பிரியாணி செய்வது என்று முடிவெடுப்பதில் தான் பெரிய சிரமமே..! சுவையான, நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த 5 அசைவ பிரியாணி வகைகளை தீபாவளிக்கு செய்யலாம்.

இதையும் படியுங்கள் : மதுரையில் தீபாவளி கடைசி நேர விற்பனை படுஜோர் – விளக்குத்தூண், மாசி வீதிகளில் அலைமோதும் கூட்டம்..!

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி…  இந்த 5 வகை பிரியாணி தான் இந்த வருட தீபாவளிக்கான டாப் செலக்‌ஷன். இந்திய அளவில் இதுதான் ட்ரெண்டிங். பலரும் இந்த பிரியாணி வகைகளையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் இந்த வருட தீபாவளி பண்டிகை பிரியாணி மணத்தால் நிரம்பும் என்று எதிர்பார்க்கலாம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.