திரிணாமுல் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மேற்கு வங்க அரசு அதிகாரிகளின் சொத்துக்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதிகாரிகள் தங்களின் சொத்துக்களின் விவரங்களை அரசுக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விதி சில காலமாக இருந்ததாகவும், அரசு அதிகாரிகள் இதை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மீண்டும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில், பல உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அரசின் கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்தி: ‘தமிழகத்தில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று’
சிபிஐ-யின் தொடர்ச்சியான ஆய்வுக்கு மத்தியில், மேற்கு வங்க அரசாங்கம் சில கடுமையான முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், அரசு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.








