வேதாரண்யம் அடுத்த, கோடியக்கரை கடற்கரையில் 25 கிலோ எடையுள்ள பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஒரு சாக்குபையில் பீடி இலைகள் அடங்கிய 5 பண்டல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கோடியக்கரைக்கு சென்று கடற்கரையில் ஒதுங்கி கிடந்த சுமார் 25 கிலோ எடையுள்ள பீடி இலைகளை கைப்பற்றி வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த பீடி இலை பண்டில் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்லும் பொழுது படகில் இருந்து தவறி விழுந்ததா? அல்லது கடத்தலுக்காக கடற்கரையில் வைத்திருந்தார்களா ? என கடலோர காவல் குழும போலீசார், கீயூ பிரான்ச் போலீசார் மற்றும் சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ரூபி.காமராஜ்








