முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஈ’யின் தொல்லுயிர் படிமம் !

ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட ஈ’யின் தொல்லுயிர் படிமம் மூலம் மகரந்த சேர்க்கையில் ஈக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளது.

சுமார் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஈயின் தொல்லுயிர் படிமம் தற்போது ஜெர்மனியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத குவாரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைழகத்தின் தாவரவியலாளர் பிரட்ஞர் கிர்ம்சன் இத்தொல்லுயிர் படிமம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆய்வு தொடர்பாக அவர் கூறுகையில்’ ஈ’யின் வயிற்றுப்பகுதி வீங்கி இருக்கிறது. வயிற்றுப் பகுதியை ஆய்வு செய்து பார்த்ததில் பல வகை பூக்களின் மகரந்தம் இருந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மகரந்த சேர்க்கையில் தேனீக்களும் பறவைகளும் ஈடுபடுவதுதான் வழக்கம் என்று கூறப்பட்டாலும் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஈ’க்களும் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மேலும் இந்தவைகை ஈ’க்களின் வயிற்றுப் பகுதியில் காணப்படும் தடித்த முடிகள் ஒரு பூக்களிலிருந்து மகரந்தத்தை மற்றொரு பூக்களுக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது. அக்காலத்தில் ஈ’க்களாக இருந்தவை தற்போது தேனீக்களாக உருமாறியிருக்க வாய்ப்புள்ளது’ என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செல்லப்பிராணியுடன் கேதார்நாத் கோவிலுக்கு சென்ற நபர்- வைரலாகும் வீடியோ

G SaravanaKumar

வாட்ஸ் அப்பில் வீடியோக்களை மியூட் செய்யும் வசதி: சோதனையில் புதிய அப்டேட்!

Jayapriya

மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்!