மும்பை ரயில்வே அணியில் இடம்பிடித்த ராசிபுரம் மாணவர்

கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்த ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு, மும்பை ரயில்வே அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தறி தொழிலாளி மகன் லோகேஷ். கல்லூரி மாணவரான இவர் கிரிக்கெட்…

கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்த ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு, மும்பை ரயில்வே அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தறி தொழிலாளி மகன் லோகேஷ். கல்லூரி மாணவரான இவர் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தால் சிறுவயது முதல் பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார். அதன்பின், கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடியதால் அவருக்கு ஆத்தூரில் நடைபெற்ற கிரிகெட் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்து.

அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட அவர் அந்த போட்டியில் மேன் ஆப் தி சீரியஸ் வாங்கி அசத்தினார். இதையடுத்து அவருக்கு சென்னையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனுடன் மும்பை அகாடமி அணிக்கு தேர்வாகிய லோகேஷ் 24 லீக் ஆட்டத்தில் பங்கேற்று 832 ரன்கள் எடுத்தார். அதில் 73 பவுண்ரி 56 சிக்சர் அடித்ததுடன் 78 ஓவர்களில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்விளைவாக தற்போது அவர் மும்பை ரயில்வே அணியில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.