புதுச்சேரியில் ரூ.4,634 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்:  திமுக, காங், வெளிநடப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாத செலவுக்கான ரூ.4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக,  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி…

புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாத செலவுக்கான ரூ.4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக,  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  யூனியன் பிரதேசமான புதுச்சேரி பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.  இந்நிலையில் புதுச்சேரி அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.

இந்த நிலையில் அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று (பிப்.22) தாக்கல் செய்தார்.  ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி,  அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர்  செல்வம் அறிவித்தார்.

இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்க்கட்சிகளான திமுக,  காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது.  இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.