முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணா பல்கலை., 42வது பட்டமளிப்பு விழா; பிரதமர் பங்கேற்கிறார்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகைதந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பிலும், பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா கிளிக்ஸ்…’

நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய பிரதமருடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்து நள்ளிரவு வரை ஆலோசனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு நண்பகலில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட இருக்கிறார். அப்போது பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த வழியனுப்பும் நிகழ்வில் பாஜக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

EZHILARASAN D

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா? சபாநாயகர் விளக்கம்

EZHILARASAN D

மாணவி லாவண்யா உயிரிழப்புக்கு மத மாற்றம் காரணம் இல்லை – அமைச்சர்

G SaravanaKumar