முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 40 ஆயிரத்து 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 548 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 88 ஆயிரத்து 334 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 202 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 173 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மேல்சபை எம்.பியாக சுஷில்குமார் மோடி தேர்வு – மத்திய அமைச்சராகிறார்?

Arun

மணச்சநல்லூர் கோயிலை புதுப்பிக்க கோரிய வழக்கு: அறநிலையத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு!

Gayathri Venkatesan

அண்ணாத்த படப்பிடிப்பு: ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி!

Nandhakumar