நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் குணமடைந்தனர் – கேரள அமைச்சர் தகவல்

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல்…

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் செப்.11-ம் தேதி மற்றொருவர் பலியானார். அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நிபா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, கோழிக்கோட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளை மூடவும், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வந்த நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கும், இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை செய்ததில், இரண்டு முறையுமே நிபா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.