நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில்…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து, அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி, லக்னோவில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும், 3வது டி20 ஆட்டம், அகமதாபாத்தில் இன்று இரவு 7  மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடரின் கடைசி போட்டி என்பதால், இதில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.