இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இந்தியாவும், டி20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.







