339 முறை பிக்பாக்கெட்; குஜராத்தில் 4 பேர் கைது

குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டத்தில் பிக்பாக்கெட் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த இரண்டு தம்பதிகள் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்திலுள்ள வெரவல் காவல் நிலையத்தில் சமீபத்தில் இரண்டு பிக்பாக்கெட் தொடர்பான…

குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டத்தில் பிக்பாக்கெட் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த இரண்டு தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்திலுள்ள வெரவல் காவல் நிலையத்தில் சமீபத்தில் இரண்டு பிக்பாக்கெட் தொடர்பான புகார்கள் வந்தன. அதுதொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தபோது, சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பெண்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி காரில் ஏறிச் சென்றனர். அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் வெராவல் பகுதியில் உள்ள இந்தியன் ரேயான் தொழிற்சாலைக்கு அருகில் அவர்களை கண்டுபிடித்தனர். பின்பு காரில் இருந்த சஞ்சய் தாக்கூர், அவரது மனைவி கீதா, நரேஷ் பாபோர், அவரது மனைவி ரேகா ஆகியோரை கைது செய்தனர். 4 பேரும் கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்தில் பல

இடங்களில் 339 பிக்பாக்கெட் குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
இரண்டு தம்பதிகளையும் கைது செய்த நிலையில், திருடிய பணத்தில் அவர்கள் வாங்கிய ஐபோன், கார் மற்றும் அவர்களிடம் இருந்த பணம் ரூ.16,000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடத்தை பொறுத்து பிக்பாக்கெட் செய்தது தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.