சீனாவின் தலைநகரில் கடுமையான வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை பேரழிவில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காணாமல் போயுள்ளனர். நாட்டின் வடக்குப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கனமழையின் அச்சுறுத்தல் தொடர்கிறது.
பெய்ஜிங் நகர அரசாங்கத்தின் கூற்றுப்படி, மேற்கு மலை பகுதிகளில் பல நாட்கள் கனமழை பெய்தது. இதனால் சுமார் 59,000 வீடுகள் இடிந்து விழுந்தன. சுமார் 150,000 வீடுகள் சேதமடைந்தன. மேலும் 15,000 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பெய்ஜிங் தலை நகரின் துணை மேயர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “100 க்கும் மேற்பட்ட பாலங்கள் உட்பட ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ளன. சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, முழு மறுசீரமைப்புக்கு மூன்று ஆண்டுகள் ஆகலாம். வார இறுதியில் டோக்சுரி சூறாவளியின் விளைவுகளால் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காணாமல் போயுள்ளனர்.
பெய்ஜிங்கிற்கு வெளியே உள்ள ஹெபே மாகாணம், பிராந்தியத்தின் மிக மோசமான வெள்ளத்தைக் கண்டுள்ளது. பெய்ஜிங்கின் தென்மேற்கே Zuozhou இல் வெள்ள நீர் குறையத் தொடங்கியது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 125,000 மக்களில் சிலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
ஜிலின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ஷுலான் நகரில் ஐந்து நாட்களாக பெய்த மழையால் சாலைகள் ஆறுகளாக மாறி ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காணாமல் போயுள்ளனர்” என துணை மேயர் தெரிவித்துள்ளார்.







