ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. டி2 மரோக் ரம்பனில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலையில் பெரும் மண் குவியல் கிடப்பதால், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தடைபட்டுள்ளது. NH-44 இல் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் உறுதிப்படுத்தல் இல்லாமல் மக்கள் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.







