மதுரையில் பழமையான கட்டடம் இடிந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மேல வடம்போக்கி தெருவில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான மிக பழமையான 3 மாடி கட்டத்தில் பின்புற பகுதி இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன, பிற்பகல் 1 மணியளவில் இடிக்கப்படாமல் இருந்த முன்புற பகுதி திடீரென சரிந்து விழுந்தது, 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சந்திரன், ராமர், ஜெயராமன் ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர், காயமடைந்த மூவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இது குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







