32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

அர்ச்சகர் படிப்பை முடித்த 3 பெண்கள்: கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் படிப்பை முடித்துள்ள நிலையில், கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பதவி ஏற்ற போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தார். அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கென்று 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களைத் தமிழக அரசு நிறுவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி அளிக்கும் கல்லூரிகளில் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பேர் பயிற்சி முடித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…

என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து

EZHILARASAN D

சச்சி சாரின் வாக்கு பளித்தது – பழங்குடியினப் பெண் நஞ்சம்மா நெகிழ்ச்சி

Web Editor

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,05,000 கன அடியாக அதிகரிப்பு

Arivazhagan Chinnasamy