ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முன்ஜா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனை அடுத்து அந்த பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், உயிரிழந்த 3 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.







