ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஜப்பானும் மற்றொரு ஆட்டத்தில் மலேசியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின்
அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. 5 மற்றும் 6வது இடங்களுக்கான போட்டியும் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி முதல் போட்டியாக நடைபெறுகிறது.
இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும்
6 ஆவது இடத்தில் உள்ள சீனா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 5 ஆவது இடத்திலும், தோல்வியுறும் அணி 6 ஆவது இடத்திலும் தொடரை முடிக்கும்.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் 7 போட்டிகளில் விளையாடி உள்ளன.
இதில் பாகிஸ்தான் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சீனா ஒரு போட்டியில்
கூட வெற்றியோ அல்லது சமனோ செய்யவில்லை. எனவே இரு அணிகளுக்குமான வெற்றி
வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு 70 சதவிகிதமும், சீனாவுக்கு 30 சதவிகிதமும்
உள்ளது.
இதனைத்தொடர்ந்து நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில்
இரண்டாவது இடத்தில் உள்ள மலேசியா மற்றும் 3 ஆவது இடத்தில் உள்ள தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் 31 போட்டிகளில் விளையாடி உள்ளன.
இதில் மலேசியா 10 போட்டிகளிலும், கொரியா 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது. இரு
அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு என்பது மலேசியா அணிக்கு 42 சதவிகிதமும், கொரியா அணிக்கு 58 சதவிகிதமும் உள்ளது.
இதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், புள்ளிப்
பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியா, 4 ஆவது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 34 போட்டிகளில் மோதியுள்ளன. இதில்
இந்தியா 27 போட்டிகளிலும், ஜப்பான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு
அணிகளும் 4 போட்டிகளில் சமன் செய்துள்ளன. இன்றைய போட்டியில் இந்தியாவுக்கான
வெற்றி வாய்ப்பு 84 சதவிகிதமும், ஜப்பானுக்கு வெற்றி வாய்ப்பு 16 சதவிகிதமும்
உள்ளது.
லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக் கட்ட புள்ளிப்
பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 இல்
வெற்றியும், 1 போட்டியில் சமனும், செய்து 13 புள்ளிகள் பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் மலேசியா அணி 5 போட்டிகளில் விளையாடி 4 இல்
வெற்றியும்,, 1 தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள கொரியா 5 போட்டிகளில் விளையாடி 1 இல் வெற்றியும், 2 போட்டியில் சமனும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 5 புள்ளிகள் பெற்றுள்ளது.
4 ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் அணி 5 போட்டிகளில் விளையாடி 1 இல் வெற்றியும், 2 போட்டியில் சமனும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 5 புள்ளிகள் பெற்றுள்ளது. 5 ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 1 இல் வெற்றியும், 2 போட்டியில் சமனும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 5 புள்ளிகள் பெற்றுள்ளது. 6 ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் அணி 5 போட்டிகளில் விளையாடி , 1 போட்டியில் சமனும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 1 புள்ளியுடன் உள்ளது.







