3 மாநில தேர்தல் முடிவுகள்: LiveUpdates

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவுக்கு கடந்த 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதேபோல் 60…

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவுக்கு கடந்த 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.