சென்னையில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பெரும் அளவு கரன்சிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் சிங்கப்பூர் செல்ல வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் சுற்றுலா பயணிகள் விசாவில் செல்ல இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, கைப்பை மற்றும் உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. அதேபோல் தாய்லாந்து செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து சவூதி அரேபிய ரியால்களை கைப்பற்றினார்கள்.
3 பேரிடம் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரின் விமான பயணத்தையும் ரத்து செய்தனர். 3 பேரையும் கைது செய்து பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? என்று விசாரணை நடத்தி வருக்கின்றனா்.
-ம.பவித்ரா