ஆலங்குளத்தை அடுத்த சண்முகாபுரம் கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கிராமம் சண்முகாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் 4 வயது மகன் புவன், கண்ணன் என்பவரது 5 வயது மகன் இஷாந்த், பூபாலன் என்பவரது ஐந்து வயது மகள் சண்முகப்பிரியா ஆகிய மூன்று குழந்தைகளும், ஊரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு சென்று விளையாடி இருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த குளத்தில் மூன்று சிறார்களும் ரில் மூழ்கிய மூன்று தவறி விழுந்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாததால் இஷாந்த் என்ற 5 வயது சிறுவனின் தாயார் குழந்தையை தேடி சென்றுள்ளார். அப்போது குளக்கரையில் சென்று பார்த்தபோது மூன்று குழந்தைகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததை பார்த்த இஷாந்தின் தாயார், கதறி அழுதுள்ளார். அவரின் அழுகுரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று குழந்தைகளின் உடலை குளத்தில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் இந்த சோக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.