முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் எப்போது என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம், அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

கடந்த பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு, இதன் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை தீவிரத்துக்கு முன்பாகவே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இன்னும் 11 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. கொல்கத்தாவில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இதற்கிடையே இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. அதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது உறுதி செய்துள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Advertisement:

Related posts

பேருந்து கட்டணமின்றி பெண்கள் பயணம் செய்யலாம்: ஈஸ்வரன்!

Halley karthi

டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!

Halley karthi

மின் பராமரிப்புப் பணிகள் 10 நாட்களில் முடியும்: செந்தில் பாலாஜி

Halley karthi