தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

“சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிவீர பாண்டியன் மாநில நவீன கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முத்தரசி ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.