மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து…

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா மநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மாநில நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நிலநடுக்கம் நாசிக் நகரத்திலிருந்து 16 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டோரி தாலுகா பகுதியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மட்கிஜாம்ப், ஹட்னோர், நீல்வண்டி, ஜம்புட்கே, உம்ராலே, தலேகான். சிவசேனா கட்சியின் உள்ளூர் தலைவர் வித்தல்ராவ் அப்சுண்டே கூறுகையில், ஜம்புட்கே கிராமத்தில் அதிகபட்ச நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று நாசிக் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவில் முறையே 3.4, 2.1 மற்றும் 1.9 என்ற அளவில் பதிவானது. தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி பகுதியில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.