3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவார்கள்: புதுச்சேரி பாஜக தலைவர் ஆருடம்!

புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என்று, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு சாமிநாதன் அளித்த பேட்டியில், புதுச்சேரி வரலாற்றில் கடைசி காங்கிரஸ்…

புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என்று, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு சாமிநாதன் அளித்த பேட்டியில், புதுச்சேரி வரலாற்றில் கடைசி காங்கிரஸ் முதலமைச்சராக நாராயணசாமி இருப்பார் என விமர்சித்தார். அவரது ஆட்சி ஒன்மேன் ஆட்சியாக உள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்பது தான், பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்களின் விருப்பமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், கண்டிப்பாக தாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் எனவும், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக, பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் சாமிநாதன் தெரிவித்தார். முதலமைச்சர் நாராயணசாமி மீதான அதிருப்தியால், மேலும் 3 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விலக தயாராக உள்ளதாகவும் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.