163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில் சேர 3.89
லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம்
இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு http://www.tngasa.in & http://www.tngasa.org
இணையதளங்களில் கடந்த ஜூன் 20-ல் தொடங்கியது.
20-ம் தேதியே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
ஓரிரு நாட்களிலேயே 1 லட்சத்தைக் கடந்த விண்ணப்பப் பதிவு, தற்போது 3.89 லட்சமாக
உயர்ந்துள்ளது.
3,89,969 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 3,21,198 பேர் விண்ணப்பங்களை
பூர்த்தி செய்துள்ளதாகவும், அதில் 2,86,464 பேர் கட்டணம் செலுத்தியிருப்பதாகவும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டியிடும்
சூழலில், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை
கணிசமாக குறைந்துள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேரவும் கடந்த ஜூன் 20 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு
வரும் நிலையில், தற்போது வரை 1,79,072 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலைக்
கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் உள்ள நிலையில்,
மேலும் பலர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.g







