இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் 76/2

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 365 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய  தீவுகள் அணி நான்காம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்  இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.…

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 365 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய  தீவுகள் அணி நான்காம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்  இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. விரோட் கோலி 121, ரோகித் சர்மா 89, ஜடேஷா 61 ஜெய்ஷ்வால் 57, அஸ்வின் 56 ரன்கள் சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராத்வெய்ட் 75 ரன்கள் சேர்த்தார்.

இதனையடுத்து நான்காம் ஆட்டம் தொடங்கிய நிலையில், சிராஜின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி, 255 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா 57, ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனையடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

பின்னர் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் சேர்த்தனர். அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.