தென்னை மரத்தில் ஏறி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; மரம் முறிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி காட்சிகள் இணையத்தில் வைரல்!

தென்னை மரத்தில் இளைஞர்கள் ஏறி சாகசத்தில் ஈடுபடும் போது தென்னை மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் ஆற்றில் விழுந்து உயிர் தப்பினர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே காளிகாவு பகுதியில்…

தென்னை மரத்தில் இளைஞர்கள் ஏறி சாகசத்தில் ஈடுபடும் போது தென்னை மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் ஆற்றில் விழுந்து உயிர் தப்பினர்.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே காளிகாவு பகுதியில் ஆற்றில் சாய்ந்து நிற்கும்
தென்னை மரம் ஒன்றில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏறி ஆற்றில் குதித்து
சாகசத்தில் ஈடுபடும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நான்கு இளைஞர்கள் தென்னை மரத்தில் ஏறி குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மரம் முறிந்து விழுந்து நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக ஆற்றில் விழுந்து உயிர் தப்பினர். இந்நிலையில் தற்போது விபத்து காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.