கேரளாவில் கனமழை எதிரொலி; ஆரஞ்ச் எச்சரிக்கை அறிவித்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் கனமழை எதிரொலி கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை அறிவிப்பு. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய…

கேரளாவில் கனமழை எதிரொலி கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை அறிவிப்பு. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய
மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை கல்லூரி, அங்கன்வாடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை நீடிக்கும். மலையோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடிக்க கேரளா அரசு தடை விதித்துள்ளது. கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.