2வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்தியா, நியூசிலாந்து இடையே 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு இந்தியா, நியூசிலாந்து இடையே போட்டி தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் உத்தேச பட்டியல்:

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்‌ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் அல்லது ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.