2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடரின் முதலாவது ஆட்டம் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. அதில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்து- 3 அமைச்சர்கள் இடைநீக்கம்…!

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான 2-வது டி20  கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நேற்று (ஜன.07) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி 26 ரன்னும், பெத் மூனி 20 ரன்னும் எடுத்து  நிலையில், தொடர்ந்து களமிறங்கிய தஹிலா 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.