இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் 2வது ஒருநாள் போட்டி

இந்தியா வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி…

இந்தியா வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த 6-ம் தேதி இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு முதலாவது ஒருநாள் போட்டி நடைப்பெற்றது.

இதில், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. சென்ற ஆட்டத்தில் இந்தியாவின் பந்துவீச்சே அணியின் வெற்றிக்கு வித்தாக அமைந்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய சஹால் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BCCI/status/1491316185421709312

இதனையடுத்து 1க்கு பூஜ்ஜியம் என்றக் கணக்கில் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து 2-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு தொடங்குகிறது. மேலும், இந்த போட்டிக்கான டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்ற ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆட்டத்தில் அபார பந்துவீச்சில் இந்திய அணி அசத்தியதால் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.