‘சென்னையில், 2வது விமான நிலையம் அமைக்கப்படும்’ – அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

விரைவில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில்…

விரைவில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

அதில், ரூ.38,000 கோடி செலவில் டெல்லிக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை ஜிவாரில் கட்டி வருவதாகவும். அதேபோல, மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் ரூ.17,000 கோடி செலவில் கட்டி வருவதாகவும் தெரிவித்த அவர்,

அண்மைச் செய்தி: “சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்”

சென்னைக்கும் 2-வது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்காக 4 இடங்களை மாநில அரசு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்த அவர், மாநில அரசு தேர்வு செய்த அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக போபாலிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 3 இண்டிகோ விமான சேவையை தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.