காயல்பட்டிணத்தில் கே.பி.எல் கால்பந்து போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் 15-வது ஆண்டு கே.பி.எல் கால்பந்து போட்டித் தொடர் கோலாகலமாக தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டிணத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்று கே.பி.எல் என்ற பெயரில் கால்பந்து போட்டி…

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் 15-வது ஆண்டு கே.பி.எல் கால்பந்து போட்டித் தொடர் கோலாகலமாக தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டிணத்தில் ஐபிஎல்
கிரிக்கெட் போட்டியை போன்று கே.பி.எல் என்ற பெயரில் கால்பந்து போட்டி
நடைபெற்று வருகிறது. 15 வது ஆண்டு கால்பந்து போட்டி தொடர் வாவு
வஜீஹா வணிதையர் மகளிர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

போட்டியை கல்லூரி செயலர் முஹ்தஸிம்,  வி யுனைடெட் அமைப்பின் உரிமையாளர் அலிபசல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று நடந்த போட்டியில் சேகுணா யுனைடெட் , சிங்கை கிங்ஸ் அணிகள் மோதின, இதில் சிங்கை கிங்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கால்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநில வீரர்களும் பங்கேற்கின்றனர். முதல் பரிசாக ரூ. 35 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கோப்பையும், இரண்டாவது பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்படுகிறது. அரை இறுதியில்  நுழையும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், சிறந்த இளம் வீரர்கள், கோல்கீப்பருக்கு
பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.