கொள்ளிடத்தில் நீர் திறப்பால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன-அமைச்சர் கே.என்.நேரு

கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள்,…

கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள், குருவை சாகுபடி மாற்று பயிர்கள் மானியத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய அமைச்சர் கே.என் நேரு கூறியதாவது:

3,175 நபர்களுக்கு இன்று 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. நரிக் குறவர்களின் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்த இலவச வீட்டு மனை பட்டா 59 நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

துறையூர் பகுதியில் ஆய்வு செய்ய சென்றபோது நரிக்குறவர்கள் தங்களுக்கு கடனுதவி வேண்டுமென்று கேட்டிருந்தனர். இதில் 10 நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்துள்ளோம்.

பயிர் காப்பீட்டு திட்டத்தை தாங்கள் செய்ய வேண்டிய கடமையாகவே விவசாயிகள் வைத்துள்ளனர்.  எனவே அதைப் பற்றி விவசாயிகளுக்கு ஆர்வம் இல்லை என்று கூற முடியாது.

காவிரியில் 1.35 லட்சம் கன அடி தண்ணீர் வந்த காரணத்தால் மட்டுமே கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது – கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன.

கிளை வாய்க்கால்களில் முழுவதிலும் தண்ணீர் திறப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம் – ஒரு மாதத்திற்கு பிறகு விவசாயிகள் ஒரு போகத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். எனவே அந்த நேரத்தில் சரியாக நாங்கள் தண்ணீரை வழங்கி விடுவோம்  என்றார் அமைச்சர் நேரு.

வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “இலவச மின்சாரம்  கடந்த ஆறு மாதத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பட்ஜெட்டில் 50 ஆயிரம் புதிய மின் இனைப்பு வழங்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்காப்பீட்டில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைந்து உள்ளது என்பதில் உண்மை இல்லை. பயிர்காப்பீட்டுத் திட்டம் குறித்து வற்புறுத்துகிறோம். விழிப்புணர்வை தருகிறோம். பயிர் காப்பீடு செய்வதும் செய்யாததும் அது அவர்கள் கையில் தான் உள்ளது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.