ஓடிப்போன பெண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் – கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி

தேனி அருகே கூலையனூரில் ஓடிப்போன பெண்ணை தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் என்று கிண்டல் செய்தவரை இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கூலையனூரை சேர்ந்தவர்…

தேனி அருகே கூலையனூரில் ஓடிப்போன பெண்ணை தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் என்று கிண்டல் செய்தவரை இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், கூலையனூரை சேர்ந்தவர் தவசி (50). இவரின் உறவினரான முருகன்
என்பவரின் மகள் முபிதா என்பவரை பாலர்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன்
பிரபுவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பிரபு (23) நாள்தோறும் வேலை முடித்த
பின்பு தனக்கு திருமணம் முடித்து வைத்த தவசியுடன் சேர்ந்து மது அருந்துவதை
வழக்கமாக கொண்டுள்ளார். பிரபுவிற்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ளது. தனது மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து நிலையில் தவசி நாள்தோறும் மது அருந்தும் நேரத்தில் ஓடிப்போன பெண்ணைத் தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் என தொடர்ச்சியாக பலமுறை அவரை கிண்டல், கேலி செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாமல் ஆத்திரமடைந்த பிரபு கத்தியை மறைத்து வைத்து தவசியுடன் மது அருந்தச் சென்றுள்ளார். அப்பொழுது மீண்டும் ஓடிப்போன பெண்ணைத் தானே உனக்கு கல்யாணம் செய்து வைத்தேன் என தவசி மறுபடியும் கிண்டல் செய்யவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியினை எடுத்து பிரபு தவசியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். தவசி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரபு அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்த வீரபாண்டி காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தலைமறைவான பிரபுவை தேடி வந்த நிலையில், பிரபு தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மதுவாலும், கேலி கிண்டல் பேச்சாலும் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம்
தேனி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.