பயண நேரத்தை குறைக்கும் 27 தேசிய நெடுஞ்சாலைகள்- மத்தியமைச்சர் நிதின்கட்கரி

டெல்லி-காத்ரா 6 மணிநேரம், டெல்லி-மும்பை 12 மணிநேரமாகவும் புதிய தேசிய பசுமை வழி தேசிய நெடுஞ்சாலைகள் பயணத்தை நேரத்தை குறைக்கும் வகையில் அமையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற…

டெல்லி-காத்ரா 6 மணிநேரம், டெல்லி-மும்பை 12 மணிநேரமாகவும் புதிய தேசிய பசுமை வழி தேசிய நெடுஞ்சாலைகள் பயணத்தை நேரத்தை குறைக்கும் வகையில் அமையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன்படி 27 பசுமை வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்த பசுமை வழி தேசிய நெடுஞ்சாலைகள் பயண தூரத்தை குறைக்கும்.

டெல்லி-சண்டிகருக்கு இடையேயான பயண தூரம் 2.5 மணிநேரமும், டெல்லி-அமிர்தசர் 4 மணிநேரமும், டெல்லி-காத்ரா 6 மணிநேரமும், டெல்லி-ஸ்ரீநகர் 8 மணிநேரமும், டெல்லி-மும்பை 12 மணிநேரமும், டெல்லி-ஜெய்பூர் 2 மணிநேரமும் மற்றும் சென்னை-பெங்களூர் 2 மணி நேரமாகவும் இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றுடன் தளவாடச் செலவுகளை 14-16 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது குறித்து வலியுறுத்தினார். தளவாடச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் பெரும் சேமிப்பு ஏற்படும். இதன் மூலம் ஏற்றுமதியில் 50 சதவீதமாக அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியம் என்றும் அமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.