கேரளாவில் பிடிப்பட்ட 2500 கிலோ போதைப்பொருள் எதிரொலி; தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்…

தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக…

தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும இந்திய கடற்படையும் இணைந்து தொடர்ச்சியாக நடத்திய அதிரடி சோதனையில் தான் இது போன்ற ரூ.25000 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு படையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.