முக்கியச் செய்திகள் தமிழகம்

250 சவரன் கொள்ளை; நகை கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

திறந்து ஒரே மாதத்தில் நகை கடையின் பூட்டை உடைத்து 250 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளியை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள புக்கிரவாரி கிராமத்தில் பல்லவன் கிராம வங்கி பக்கத்தில் லோகநாதன் என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நகை கடை ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். இக்கடையில் பணியாளர்களை கொண்டு கடை நடத்தி வரும் இவர் நேற்று வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடை திறக்கபட்டு சில மாதங்களே ஆனதால் கடையில் 250 பவுன் நகை மற்றும் 25 கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கடையில் வைத்து விட்டு பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட கடையை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு பல்லவன் கிராம வங்கியின் உடைய சிசிடிவி கேமராக்களை துண்டித்தும் நகை கடையின் முன்பு வைக்கப்பட்டுள்ள கேமராக்களை திருப்பி வைத்தும், கடையின் பூட்டை பிளேடால் அறுத்து உடைத்து உள்ளே சென்று கடையில் அலங்கரிக்கப்பட்ட வகையில் வைக்கப்பட்டிருந்த நகை ட்ரேக்களை நகையுடன் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவற்றை அருகே இருந்த மக்காசோள காட்டினுள் சாவகாசமாக அமர்ந்து மது அருந்தி விட்டு நகைகளை பிரித்து எடுத்து சென்று தப்பி ஓடி உள்ளனர்.

நகை கடையில் பூட்டு உடைக்கப்பட்டதாக உரிமையாளருக்கு காலை தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை களவாடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து பரஞ்சனம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி பகலவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்து வருவதோடு, குற்ற பிரிவு போலிசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு

Jayasheeba

உதகை மலர் கண்காட்சி ரத்து? : பூத்துக்குலுங்கும் மலர்கள்

Jeba Arul Robinson

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை வேகமாக சார்ஜ் செய்ய வேண்டுமா?

Arivazhagan Chinnasamy