தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2,405 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். 3,006 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 25,28,806 ஆக அதிகரித்துள்ளது. 24,65,250 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 33,606 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 29,950 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 256 பேரும், ஈரோட்டில் 159 பேரும், தஞ்சாவூரில் 163 பேரும், சேலத்தில் 155 பேரும், சென்னையில் 148 பேரும் திருப்பூரில் 143 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இதுவரை 8,279 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே மாநிலத்தில் பதிவாகியுள்ள உயிரிழப்புகளில் அதிகபட்சமாகும்.








