ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் அடெலைட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டை இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கி இந்திய அணி, 11 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த நான்கு விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறது.







