முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதித்துள்ளார்.

சென்னை எழும்பூரிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக தலைமை அலுவலகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், திருச்சி, சேலம், மதுரை,சென்னை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களை சேர்ந்த முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட பொது மேலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடைகள் மூட வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 84 கடைகள் இடமாற்றம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிக விலைக்கு விற்பனை செய்த 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1,599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டன. அவற்றில் 933 பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் புகார்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியபின் அறிவிப்பு வெளியிடுவார்.” என்று கூறினார்.

மேலும், “இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை. நாங்கள் ஆய்வுக்கூட்டத்தில் கூட இது குறித்து பேசுவதில்லை. இனிவரும் காலங்களிலும் இலக்கு நிர்ணயம் இருக்காது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்க 38 மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர்கள், பத்திரிக்கையாளர்களை உள்ளிடக்கிய வாட்ஸ் அப் குழுவினை தொடங்கப்படவில்லை. அந்த குழுவில் அமைச்சரும் இடம்பெற உள்ளதால் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த அவர், “சீரான மின் விநியோகத்திற்கு துறை தயாராக இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மின்தடை இல்லாத வகையில் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் மின்சந்தையில் இதுவரை 1.04%தான் நாம் மொத்த தேவையில் கொள்முதல் செய்கிறோம் அதுவும் நிலக்கரி பற்றாக்குறையினால்தான். குஜராத்தான் அதிகம் வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்துள்ளது, அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளது. கடந்த கால ஆட்சியின் தவறுகளை சரிசெய்யும் வண்ணம்தான் தற்போது மின்வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வர தயார். தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்

தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள் அதையும் சந்திக்க தயார்.” என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவையில் 60% வரை கொரோனா தொற்று குறைந்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

Jeba Arul Robinson

மேகதாது: கர்நாடகாவை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Gayathri Venkatesan

இந்தியாவில் விரைவில் ஒன்பிளஸ் 9RT

EZHILARASAN D