மருது சகோதரர்களின் 222-ம் ஆண்டு குருபூஜை!

சிவகங்கை மாவட்டம்,  காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு கிராம பெண்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தி துவக்கி வைத்தனர். வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு…

சிவகங்கை மாவட்டம்,  காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 222 வது
குருபூஜை விழாவை முன்னிட்டு கிராம பெண்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தி துவக்கி வைத்தனர்.

வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜை ஆண்டுதோறும் அக்.27 ம் தேதி காளையார்கோவிலில் அவர்கள் நினைவிடத்தில் அனுசரிக்கப்படுவது வழக்கம்.  இந்தாண்டு எஸ்.பி அரவிந்தன் தலைமையில் 3 எஸ்.பிக்கள்,  6 ஏ.டி.எஸ்.பிக்கள்,  20 டி.எஸ்.பி,  40 இன்ஸ்பெக்டர்கள் 360 எஸ்.ஐக்கள்,  1024 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து நினைவிடத்தில் நேர்த்திகடன் செலுத்தியதுடன்,  கோவை காமாட்சிபுரம் ஆதீனம் தலைமையில் குருபூஜை விழாவானது துவங்கியது.  இதனை தொடர்ந்து பல்வேறு சமுதாய மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.