அமெரிக்காவில் படித்து வந்த 22 வயது இந்திய மாணவர் மாயம்…..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் படித்து வரும் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா. ஐஐடி மெட்ராஸில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவின் பெர்க்லி பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் 22 வயதாகும்  சாகேத் ஸ்ரீனிவாசய்யாவை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று தெரிகிறது. கடைசியாக அவரை கடந்த செவ்வாய் கிழமை டுவைட் வேயின் 1700 பிளாக்கில் காணப்பட்டதாகா கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெர்க்லி காவல் துறையானது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சாகேத் ஸ்ரீனிவாசய்யா காணாமல் போனது தொடர்பாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த, யுசி பெர்க்லியில் முதுகலைப் பட்டதாரி மாணவரான சாகேத் ஸ்ரீனிவாசய்யா காணாமல் போனது குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. துணைத் தூதரகம் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது, மேலும் மாணவரைக் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது ” என்று கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.