2026-27 தமிழ்நாடு பட்ஜெட்: ஹஜ் புணித யாத்திரைக்கு மாணியம் உயர்வு!

தமிழ்நாடு பெட்ஜெட்டில் ஹஜ் புணித யாத்திரைக்கான மாணியம் உயர்வு ரூ.35,000-ஆக் உயர்த்தப்பட்டுள்ளது.

2026-27-ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.  அப்போது சிறுபான்மையினர் நலத்துறை குறித்து பேசிய அமைச்சர் மரிய வில்சன். “மசிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையினை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் மானியம் நமது அரசால் 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் 1.05 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும். மேலும், கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மையினரைப் பாதுகாப்பதிலும், அவர்களின் நலன்களிலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவே செய்யாது.

    இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.