2022ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போது உள்ள சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை, பாஞ்சப், ஐதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுடன் சேர்த்து மேலும் இரண்டு புதிய அணிகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான பணிகளை ஐ.பி.எல். நிர்வாகம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்தும், மேற்கொண்ட நடவடிக்கைக குறித்து ஐ.சி.சி. வசம் ஒப்படைக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 2021 ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை போட்டியை சென்னை, பெங்களூரு, மொகாலி, தர்மசாலா, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடத்த வேண்டும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.







