சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது!

ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் ராஜம்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ளது சேஷாசலம் வனப்பகுதி. …

ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் ராஜம்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ளது சேஷாசலம் வனப்பகுதி.  இந்த வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துதல் அடிக்கடி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், ராஜம்பேட்டை அருகே உள்ள குடும்மண்டல பள்ளி
சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து 20 பேர் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றுள்ளனர்.  இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேரை இரண்டு வெவ்வேறு இடங்களில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 15 செம்மரக்கட்டைகள்,  ஒரு கார் செம்மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட கோடாலிகள் உட்பட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.