முக்கியச் செய்திகள் இந்தியா

2 வயது குழந்தை கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம்: கர்நாடகாவில் அதிர்ச்சி

தனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ளது, மியபுரா கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரின் 2 வயது குழந்தைக்கு கடந்த 4 ஆம் தேதி பிறந்த நாள் . இதையடுத்து அருகில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று வழிபட்டார். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ல அந்த கிராமத்தினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து கோயிலின் வெளியே நின்று அவர்கள் வழிபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது. குழந்தை திடீரென கோயிலுக்குள் ஓடி, சாமி கும்பிவிட்டு திரும்பியது. இதைக் கண்ட அந்தப் பகுதியினர் பட்டியலின குழந்தை எப்படி கோயிலுக்குள் செல்லலாம்? என பிரச்னையாக்கினர். இதையடுத்து அந்த கிராமத்தினர் கூடி பேசி, கோயிலுக்குள் குழந்தை சென்றதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்கான பூஜைக்காக இந்த தொகையை அபராதமாக விதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீ சார் மியபுரா கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி கோப்பல் நகர போலீஸ் எஸ்.பி டி.ஸ்ரீதர் கூறும்போது, சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தோம். மக்களுக்கு அறிவுரை செய்தோம். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்ட னர்’ என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா

Halley Karthik

கோவையில் மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Web Editor

’ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்தின் உட்பொருளை புரிந்து கொள்ள வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

G SaravanaKumar