+2 பொதுத்தேர்வு | முக்கிய படங்களில் 100% மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை…

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில்,  முக்கிய படங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த…

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில்,  முக்கிய படங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.  மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

இந்நிலையில்,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார்.
இந்நிலையில்,  முக்கிய படங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,  

1) தமிழ்  – 35,

2) ஆங்கிலம் – 7,

3) இயற்பியல்  –633,

4) வேதியியல்  –471,

5) உயிரியல்  –652,

6) கணிதம்  –2587,

7) தாவரவியல்  –90,

8) விலங்கியல்  –382,

9) கணினி அறிவியல் – 6996,

10) வணிகவியல்  –6142,

11) கணக்குப்பதிவியல்  –1647,

12) பொருளியல்  –3299,

13) கணினி பயன்பாடுகள்  –2251,

14) வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்  –210

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.