பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாடப் பிரிவுவாரியான தேர்ச்சி விகிதம்!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,  பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்…  தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது.…

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,  பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்… 

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் இந்த இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக
94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.53% அதிகம்.

இதையும் படியுங்கள் : மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம் :

அறிவியல் – 96.35%

வணிகவியல் – 92.46%

கலை – 85.67%

தொழிற்பாடம் – 85.85%

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம் : 

இயற்பியல் – 98.48%

வேதியியல் – 99.14%

உயிரியல் – 99.35%

கணிதம் – 98.57%

தாவரவியல் – 98.86%

விலங்கியல் – 99.04%

கணினி அறிவியல் – 99.80%

வணிகவியல் – 97.77%

கணக்குப் பதிவியல் – 96.61%

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.